

நாகர்கோவில்: நாகர்கோவில் பள்ளிவிளையைச் சேர்ந்தவர் அசோக்குமார்(62). இவர், நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் ஆயுர்வேத மருத்துவமனை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் விஷம் அருந்திய நிலையில் அசோக்குமார் மயங்கிக் கிடந்தார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடசேரி போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், அசோக்குமார் கடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவர், தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தில் கடன் கொடுத்தவர்கள் குறித்த பெயர் விவரங்களை குறிப்பிட்டுள்ளார். கடனை திருப்பிச் செலுத்த நெருக்கடி கொடுத்ததால், அவர் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என, போலீஸார் தெரிவித்தனர்.