தருமபுரி: ராணுவ வீரர் வங்கிக் கணக்கில் பணம் திருட்டு- சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

தருமபுரி: ராணுவ வீரர் வங்கிக் கணக்கில் பணம் திருட்டு- சைபர் கிரைம் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் எ.கொல்ல அள்ளி அடுத்த பருத்திநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் மகன் ராஜமாணிக்கம் (37). இவர் இந்திய ராணுவத்தில் அருணாச்சல பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் தனது மாத ஊதியம் பெறுவதற்காக தேசிய மய வங்கி ஒன்றில் வங்கிக் கணக்கை பராமரித்து வருகிறார். அதே வங்கியில் கிரெடிட் அட்டையும் பெற்று பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தனது கிரெடிட் அட்டையின் பணப் பயன்பாடு அளவை அதிகரிக்க விரும்பியுள்ளார். இதற்காக ஆன்லைனில் தேடியபோது, அவருக்கு போலியான வாடிக்கையாளர் சேவை மைய தொடர்பு எண் ஒன்று கிடைத்துள்ளது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது எதிர்முனையில் பேசிய நபரின் வழிகாட்டுதல் படி ராஜமாணிக்கம் தனது ஸ்மார்ட் போனில் ஆப் ஒன்றை தரவிறக்கம் செய்து லாகின் செய்துள்ளார்.

சற்று நேரத்தில் ராஜமாணிக்கத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.62 ஆயிரத்து 675 பணம் குறைந்துள்ளது. இதுதவிர, அவரது கிரெடிட் அட்டையை பயன்படுத்தி ரூ.20 ஆயிரத்து 272-க்கு பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. தாமதமாக இதையறிந்த ராஜமாணிக்கம் தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆய்வாளர் பாபு தலைமையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in