Published : 02 Jan 2022 08:42 AM
Last Updated : 02 Jan 2022 08:42 AM

தென்காசி மாவட்டத்தில் ஓராண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 58 பேர் கைது

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை வெளியிட் டுள்ள அறிக்கை:

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் கடத்தல், போக்ஸோ, மணல் திருட்டு போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டில் 58 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2020-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 944 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 6,58,71,640 மதிப்பிலான 6,587 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டில் 1,109 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கடந்த 2020-ம் ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 201 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 56,43,600 மதிப்பிலான 56 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் 221 பேர் கைது செய்யப்பட்டனர். 2020-ம் ஆண்டு சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக 2,729 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.8,09,243 மதிப்பிலான 28,529 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டில் 3,765 பேர் கைது செய்யப்பட்டனர்.

2020-ம் ஆண்டு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக 145 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டில் 148 பேர் கைது செய்யப்பட்டனர். அடிதடி, கொலை, கொள்ளை, திருட்டு போன்ற வழக்குகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள், பிரச்சினைக்குரிய நபர்கள் 1,571 பேர் மீது கடந்த 2020-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் 1,655 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், 2020-ம் ஆண்டு மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 6,13,618 வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் இதுபோன்ற குற்றங்களுக்காக 75,961 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 2020-ல் 2,938 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 4,131 ஆக அதிகரித்தது. புதிதாக பிறந்துள்ள புத்தாண்டில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு, குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து, பொது மக்களின் நலனில் என்றும் அக்கறையுடன் செயல்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x