புத்தாண்டு கொண்டாட்டத்தில் தகராறு: குடியாத்தம் அருகே இளைஞர் கொலை

புத்தாண்டு கொண்டாட்டத்தில் தகராறு: குடியாத்தம் அருகே இளைஞர் கொலை
Updated on
1 min read

புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய் யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி அருகேயுள்ள கொத்தமாரி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் வினித்(23). இவர், ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் அருகே இளைஞர்கள் ஒன்றுகூடி புத் தாண்டை கொண்டாடினர். இதில் வினித்தும் கலந்துகொண்டு ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சி யுடன் வரவேற்றார்.

அப்போது, அதே ஊரைச் சேர்ந்த அசோகன் (44) அவரது மகன் ஆகாஷ் (23) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களுக்கும், வினித்தின் உறவினர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

இதனை வினித் தட்டிக்கேட்டார். அப்போது அசோகனும், அவரது மகன் ஆகாஷ் ஆகியோர் ஒன்று சேர்ந்து வினித்தை சரமாரியாக தாக்கினர். அசோகன் கட்டையால் தாக்கினார். ஆகாஷ் கத்தியால் வினித்தை குத்தினார். இதனால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் வினித் சரிந்து கீழே விழுந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், நண்பர்கள் இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக, வினித்தை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வினித் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந் ததும் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் ராஜன் பாபு மற்றும் மேல்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வினித் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர் பாக அசோகன், ஆகாஷ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீரென ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in