

உசிலம்பட்டி அருகிலுள்ள பெரியகட்டளையைச் சேர்ந்த தம்பதி முத்துப்பாண்டி-கவுசல்யாவுக்கு ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சேடபட்டி அரசு மருத்துவமனையில் கடந்த டிச. 21-ல் கவுசல்யாவுக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. டிச.26-ல் அக்குழந்தை இறந்தது. சேடபட்டி போலீஸார் விசாரணையில் குழந்தை கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், வருவாய்த்துறையினர் முன்னிலையில் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தபோது, தலையில் தாக்கப்பட்டு குழந்தை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த கணவன், மனைவியை போலீஸார் நேற்று கைது செய்தனர்.