அமானுல்லா.
அமானுல்லா.

திருப்பத்துார்: வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது

Published on

திருப்பத்துார் மாவட்டத்தில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

திருப்பத்துார் நகர காவல் துறையினர் நேற்று முன்தினம் மாலை திருப்பத்துார் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்துாரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.

பிறகு அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், அவர் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அமானுல்லா(39) என்பதும். இவர் ஓட்டிவந்த வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது.

மேலும், இவர்பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 வாகனங்களை பறிமுதல் செய்த நகர காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in