பெண் குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து வீடியோ பாடலை பாடிய கானா பாடகர் கைது

பெண் குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து வீடியோ பாடலை பாடிய கானா பாடகர் கைது
Updated on
1 min read

சென்னையைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற சரவெடி சரண். இவர் பாடிய கானா பாடல்கள் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சமீபத்தில், ‘டோனி ராக் - போட்டி கானா’ என்றபெயரில் சரவெடி சரண் பாடியவீடியோ பாடல் ஒன்று யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. அப்பாடலில், பெண் குழந்தைகள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

அதன் விளைவாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய திருவள்ளூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸார், நேற்று முன்தினம் இரவு சரவெடி சரணைக் கைது செய்தனர். தன் செயலுக்கு சரவெடி சரண் மன்னிப்புக் கோரியதையடுத்து, அவரை எச்சரித்த போலீஸார், காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

இதுபோன்று, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையைத் தூண்டும் விதமாக ஏதேனும் வீடியோபதிவுகளோ அல்லது குறுஞ்செய்திகளோ பொதுமக்களின் கவனத்துக்கு வரும்போது, அந்த பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக 63799 04848 என்ற பிரத்யேக மொபைல் எண்ணுக்கு போன் மூலமாகவோ, வாட்ஸ் மூலமாகவோ தகவல் தெரிவிக்குமாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in