ஆண்டிபட்டி: பாலியல் வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

ஆண்டிபட்டி: பாலியல் வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
Updated on
1 min read

ஆண்டிபட்டி: பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டி, பாலியல் தொல்லை அளித்த ஆண்டிபட்டி அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கதிர்நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அருள்குமரன்(39). இவர் கன்னியப்ப பிள்ளைபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். விவாகரத்து பெற்றவர்.

இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த நபருக்கும் குடும்ப ரீதியில் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் பண்ணைக்காடு பகுதியில் ஏற்பட்ட பிரச்சினையால் அந்நபர் தனது மனைவி, மகளுடன் அருள்குமரன் வீட்டில் தங்கினார்.

அப்போது ரகசியமாக அவரது மகளை படம் பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாகக் கூறி, அருள்குமரன் பாலியல் தொல்லை கொடுத்துஉள்ளார். மேலும் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படிகொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆண்டிபட்டி மகளிர் போலீஸில் அப்பெண்ணின் தாயார் புகார் அளித்தார். இதன்பேரில் ஆய்வாளர் தேன்மொழி வழக்குப் பதிவு செய்து, உடற்கல்வி ஆசிரியர் அருள்குமரனை கைது செய்தார். உடந்தையாக இருந்த அருள்குமரனின் பெற்றோர், சகோதரி மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in