

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே தொரவலூரை சேர்ந்தவர் முனியப்பன் மகன் கண்ணன் (13). எட்டாம் வகுப்பு படித்து வந்தார். தனது வீட்டில் நேற்று ‘ஃப்ரீபயர்’ விளையாடி கொண்டிருந்த கண்ணன், திடீரென அறைக்குள் சென்று தூக்கிட்டு கொண்டார்.
இதையறிந்த பெற்றோர், கண்ணனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கண்ணனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த பெருமாநல்லூர் போலீஸார், சிறுவனின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மன அழுத்தம் காரணமாக சிறுவன் தற்கொலை செய்து கொண்டது, போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.