மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ஆசிரம உரிமையாளர், மனைவி கைது

மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ஆசிரம உரிமையாளர், மனைவி கைது
Updated on
1 min read

சென்னை, கொளத்தூர் பகுதியில் வசிப்பவர் வனஜா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.

அதில், கடந்த 2013-ம் ஆண்டு பள்ளி மாணவியாக இருந்தபோது, புத்தகரம் திருமால் நகர் பகுதியில் இயங்கி வரும் ஆசிரமத்துக்கு உடல் நிலை சரியில்லாத எனது தாயாருக்கு விபூதி வாங்க சென்றேன். அப்போது ஆசிரமத்தை நடத்தி வந்த கொளத்தூர், விநாயகபுரத்தைச் சேர்ந்த சங்கர நாராயணன் (48) என்பவர், அவரது மனைவி புஷ்பலதா (43)உதவியுடன் எனக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தார். நான் மயங்கிய நிலையில் இருந்தபோது சங்கர நாராயணன் பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து நிர்வாண படங்களையும் எடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு சங்கரநாராயணன் என்னை மீண்டும் தொடர்பு கொண்டு ஏற்கெனவே, எடுத்த நிர்வாண படங்களை உனது கணவரிடம் காண்பித்து விடுவதாகக் கூறி மிரட்டி என்னை பல முறை பலாத்காரம் செய்தார். எனவே, சங்கர நாராயணன் மற்றும் அவரது மனைவி புஷ்பலதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார்.

அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சங்கரநாராயணன் அவரது மனைவி புஷ்பா உதவியுடன் வனஜாவை பாலியல் பலாத்காரம் செய்தது உண்மையென தெரியவந்தது. அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட இதர சட்டப்பிரிவுகளில் சங்கர நாராயணன், அவரது மனைவி புஷ்பலதா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in