மாமல்லபுரத்தில் ரூ.25 லட்சம் போலி மதுபானம் பறிமுதல்

கல்பாக்கம் அருகேயுள்ள பூந்தண்டலம் கிராமத்தில் உள்ள சொகுசு பங்களாவில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த  போலி மதுபான பாட்டில்கள்.
கல்பாக்கம் அருகேயுள்ள பூந்தண்டலம் கிராமத்தில் உள்ள சொகுசு பங்களாவில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த போலி மதுபான பாட்டில்கள்.
Updated on
1 min read

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் கிராமத்தில், போலி மதுபானம் உற்பத்திசெய்து, விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருக்கழுக்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் இணைந்து, அங்குள்ள ஒருசொகுசு பங்களாவில் சோதனைமேற்கொண்டனர். அப்போது,வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ரூ.25 லட்சம் மதிப்பிலான போலி மதுபான பாட்டில்கள் மற்றும் போலி மதுபானம் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

போலி மதுபானம் தயாரித்து,விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாக, வீட்டிலிருந்த ஜெயலட்சுமி, மணிகண்டன்,சதிஷ் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in