நகைக்காக தம்பதி வெட்டிக்கொலை: காங்கயம் போலீஸார் விசாரணை

நகைக்காக தம்பதி வெட்டிக்கொலை: காங்கயம் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

திருப்பூர்: காங்கயம் அருகே ரங்கம்பாளையம் வண்ணாம்பாறைக்காடு தோட்டம் என்ற பகுதியை சேர்ந்ததம்பதி பழனிசாமி (72), வள்ளியம்மாள் (68). இவர்களுக்கு சந்திரசேகரன் என்ற மகனும், மேகலா என்ற மகளும் உள்ளனர். திருமணமான நிலையில், திருப்பூர் மற்றும் நத்தக்காடையூரில் இருவரும் வசித்து வருகின்றனர்.

நேற்று காலை இவர்களது வீட்டின் அருகே வசித்து வந்தரமேஷ் என்பவர், பால் கறப்பதற்காக தோட்டத்துக்கு வந்தபோது, ரத்தக்காயங்களுடன் வீட்டில் தம்பதி அசைவற்று கிடந்துள்ளனர். இதுதொடர்பாக, சந்திரசேகரனை செல்போனில் தொடர்பு கொண்டு ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

வண்ணாம்பாறைக்காடு தோட்டத்துக்கு வந்து சந்திரசேகர் பார்த்தபோது, தாயும், தந்தையும் ரத்தக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. வள்ளியம்மாள் அணிந்திருந்த ஏழரை பவுன் தாலிக்கொடியை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. புகாரின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் குமரேசன் மற்றும்காங்கயம் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.

சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை காங்கயம் போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in