

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே கோனார்பட் டியைச் சேர்ந்த அதியமான் மனைவி உதயசூர்யா(35). 2 மகன்கள் உள்ளனர்.
உதயசூர்யா, கல்லூரணி ஊாட்சி செயலராக இருந்தார். இவரது சகோதரர் ஆசைக்கண் ணன்(27) சென்னையில் பொறி யாளராக மெட்ரோ ரயில் திட்டத் தில் பணிபுரிகிறார். இவர் தனது சகோதரி உதயசூர்யா வீடு கட்ட பணம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் ஆசைக்கண்ணன் தனது மனைவியுடன் கிளாதரி அரியநாச்சி அம்மன் கோயில் விழாவுக்கு சென்றார். பின்னர் இரவில் இருவரும் உதயசூர்யா வின் வீட்டுக்குச் சென்றனர். அவர்களை உதயசூர்யா அவதூறாகப் பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசைக்கண்ணன், இரும்புக்கம்பி யால் தாக்கியதில் உதயசூர்யா சம்பவ இடத்திலேயே இறந்தார். பூவந்தி போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆசைக்கண்ணனைக் கைது செய்தனர்.