Last Updated : 22 Nov, 2021 10:37 PM

 

Published : 22 Nov 2021 10:37 PM
Last Updated : 22 Nov 2021 10:37 PM

புதுச்சேரியில் மது போதையில் உணவகத்தில் தகராறு: பிரபல யூடியூப் சமையல் கலைஞரின் மகனை தேடும் போலீஸார் 

புதுச்சேரியில் மது போதையில் உணவகத்தில் தகராறில் ஈடுப்பட்ட பிரபல யூடியூப் சமையல் கலைஞரின் மகனை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் அவரின் உறவினர்கள் இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

யூடியூபில் பிரபலமானவர் டாடி ஆறுமுகம் இவருக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உணவகங்கள் உள்ளன, இவரது மகன் கோபிநாத், இவர் தனது சித்தப்பா மகன் ஜெயராம் மற்றும் நண்பர்கள் தாமு மற்றும் ஒருவர் உடன் நேற்று தனியார் நட்சத்திர உணவக விடுதியில் (pub) மது அருந்தி உள்ளார்.

அப்போது அங்கு பணிபுரியும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிடியுள்ளனர் தொடர்ந்து மது அருந்தும் நேரம் முடிந்த பின்னரும் மது கேட்டுள்ளனர்.

அதற்கு அங்கு பணியில் இருந்த ஜார்ஜ சினாஸ் என்ற ஊழியர் 11 மணிக்கு மேல் மது விற்பதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அதை அடுத்து ஆத்திரமடைந்தவர்கள் ஜார்ஜிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை பீர் பாட்டிலால் தாக்கி மது அருந்தும் இடத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்து சாலைக்கு வந்து ரகளையில் ஈடுப்பட்டுள்ளனர்‌.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீஸார் அவர்களை காவல் நிலையம் அழைத்த போது போலீஸார்க்கும் மது போதையில் இருந்தவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்ப்பட்டுள்ளது.

இதையொட்டி போலீஸார் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து செல்ல முற்பட்ட போது டாடி ஆறுமுகத்தின் மகன் கோபி மற்றும் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்,

இதனை அடுத்து அங்கிருந்த டாடி ஆறுமுகத்தின் தம்பி மகன் ஜெயராம் மற்றும் அவரது நண்பர் தாமு ஆகியோரை போலீஸார் கைது செய்து ஊழியர் ஜார்ஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்,

மேலும் குடிபோதையில் ரகளையில் ஈடுப்பட்டு போலீஸாரிடம் வாக்குவாததில் ஈடுபட்ட பிரபல யூடியூப் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகத்தின் மகன் கோபியையும் அவரது நண்பரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்,

இந்த உயர்ரக மதுபான விடுதிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் ஜோடியாக வருவதால் தனியுரிமை காக்கப்பட வேண்டும் என்பதால் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படவில்லை என உணவக நிர்வாகம் தெரிவித்துள்ளது..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x