

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.2 லட்சத்தை இழந்த விக்தியில் பட்டதாரி ஒருவர் இன்று (அக்.17) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி அருகே பி.மாத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் எஸ்.அருண்(21). பட்டதாரியான இவர், செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
அதில், ரூ.2 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன விரக்தியில், வீட்டின் அருகே அருண் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து செம்பட்டிவிடுதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிப்பதற்கு மாநில சட்டத் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியின் மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் பட்டதாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.