Last Updated : 10 Oct, 2021 10:21 AM

 

Published : 10 Oct 2021 10:21 AM
Last Updated : 10 Oct 2021 10:21 AM

குஜராத் ஹெராயின் கடத்தல் வழக்கு: கைதான நபரின் கோவை  வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

கோவை

குஜராத் மாநிலத்தில் ஹெராயின் கடத்தல் வழக்கில் கைதான நபரின் கோவை வீட்டில் தேசிய புலனாய்வு முகமை( என்.ஐ.ஏ) அதிகாரிகள்நேற்று (9-ம் தேதி) சோதனை நடத்தினர்.

கோவை மாவட்டம், வடவள்ளி அருகேயுள்ள அருண் நகர், 3வது வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(56). இவர் சில வாரங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலத்தில் நடந்த ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது குஜராத் மாநிலம், பூஜ் சிறையில் உள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சனிக்கிழமை கோவை வந்தனர். உள்ளூர் போலீஸார் யாரிடமும் அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. கோவை வடவள்ளியில் உள்ள ராஜ்குமாரின் தாயார் சுசீலா என்பவரின் வீட்டுக்கு வந்து சில மணி நேரம் சோதனை நடத்தினர்.

என்.ஐ.ஏ ஆய்வாளர்கள் அஜய்(மும்பை) மற்றும் ரொசாரியோ( சென்னை) ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் தலைமையில் இந்த சோதனை நடந்தது. இதில் கைது செய்யப்பட்ட ராஜ்குமாரின் வங்கி கணக்கு புத்தகம், செல்போன், லேப் டாப், பயணம் செய்த விவரங்கள் ஆகியவற்றை கைப்பற்றி சென்றனர்.

இவ்வழக்கில் கைதான ராஜ்குமார் சென்னையில் உள்ள ஒரு சிமெண்ட் கம்பெனியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு வடவள்ளிக்கு வந்துள்ளார். இவருக்கு மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x