விருதுநகர் அருகே வீட்டில் பதுக்கிய ஒரு டன் குட்கா பறிமுதல்

விருதுநகர் அருகே வீட்டில் பதுக்கிய ஒரு டன் குட்கா பறிமுதல்

Published on

விருதுநகர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு டன் குட்கா பொருட்களை போலீஸார் இன்று மாலை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் அருகே உள்ள வச்சக்காரப்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் இன்று மாலை ரோந்து சென்றனர். கோயில் புலிகுத்தி கிராமத்திற்குள் அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்றை அலுவலர்கள் சந்தேகத்தின் பேரில் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்தனர்.

லாரியை சோதனை செய்தபோது அதில் குட்கா மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் 50க்கும் மேற்பட்ட குட்கா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். அப்போது சங்கிலி கருப்பசாமி (30) என்பவருக்கு சொந்தமான வீடு என்பதும் அதில் கோவில்பட்டியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் வாடகைக்கு தங்கி இருந்ததும் தெரியவந்தது.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு டன் குட்கா மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் பெங்களூருவில் இருந்து லாரி ஓட்டி வந்த ராமர் (50), மகேஷ் (30) இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான முனீஸ்வரனை போலீஸார் தேடி வருகின்றன

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in