

தாம்பரம் ரயில் நிலைய வாயில் அருகே கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயில் அருகே இன்று (வியாழக்கிழமை) காலை கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். காயமடைந்த மாணவி அலறினார். இதனைத் தொடர்ந்து மாணவியைத் தாக்கிய இளைஞரும், தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் மாணவியும், இளைஞரும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
இளைஞருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். காதல் விவகாரத்தில் இளைஞர், கல்லூரி மாணவியைக் கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.