Published : 05 Jul 2021 03:08 PM
Last Updated : 05 Jul 2021 03:08 PM

சமாதானம் பேச சென்ற இளைஞர் கொலை; டிஐஜி, எஸ்.பி. விசாரணை

கிருஷ்ணராயபுரம் அருகே சமாதானம் பேச சென்ற இளைஞர் கொல்லப்பட்டடார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், போலீஸார் குவிக்கப்பட்டுளனர். திருச்சி சரக டிஐஜி, எஸ்.பி. சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பிச்சம்பட்டியில் வாய்க்கால் தடுப்புச்சுவர் மற்றும் பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. வாய்க்காலில் உள்ள மணலை அகற்றும் பணி நேற்று (ஜூலை 04) நடைபெற்றது. ஜேசிபி மூலம் மணல் அள்ளி டிப்பர் லாரியில் கொட்டும் பணி நடைபெற்றது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (28), பிரபாகரன் (28) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

சாலையில் டிப்பர் லாரி நின்றதால் லாரியை எடுக்கக்கூறியதால், அவர்களுக்கும் லாரி ஓட்டுநர் செந்திலுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, மணவாசியை சேர்ந்த கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் தர்மதுரை சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பிரபு (35) மறுநாள் பேசிக்கொள்ளலாம் எனக்கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார்.

பிச்சம்பட்டி கோயில் அருகே இன்று (ஜூலை 05) சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தபோது, தர்மதுரையுடன் வந்த 10-க்கும் மேற்பட்டோர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பிரபு-வை திடீரேன வெட்டி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில், காயமடைந்த பிரபு மருத்துமவனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மணவாசியில் உள்ள தனியார் கட்டுமான அலுவலகம், லாரி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவலறிந்த திருச்சி சரக டிஐஜி ராதிகா, கரூர் எஸ்.பி. ப.சுந்தரவடிவேல் ஆகியோர், சம்பவ இடம் மற்றும் தனியார் கட்டுமான அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டனர். இச்சம்பவத்தை அடுத்து பிச்சம்பட்டி, மணவாசியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x