Published : 27 Jun 2021 12:58 PM
Last Updated : 27 Jun 2021 12:58 PM

கரூர் அருகே காணாமல் போன தச்சர் இருநாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை

இரு நாட்களுக்குமுன் காணாமல்போன கார்பெண்டர் செல்போன் உதவியால் லிப்ட் அடியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இதுகுறித்து கரூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் தாந்தோணிமலைகணபதிபாளையம் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (52). இவர் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில் தச்சுப் பணிகள் (கார்பெண்டர்) செய்து வந்தார். இவர் மனைவி தனலட்சுமி. மகன் மணிராஜ் பெங்களூருவில் ஐடிநிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கரோனா காரணமாக தற்போது வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார். மகள் சரண்யா. இவருக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அருள்ராஜ் நேற்றுமுன்தினம் (கடந்த 25ம் தேதி) மாலை நண்பரை சந்திக்க செல்வதாக்கூறி மொபட்டில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அதன்பின் வீடு திரும்பவில்லை.

அவரது நண்பரை தொடர்புக் கொண்டுகேட்டபோது அவர் உடனே வீட்டுக்கு புறப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். அவரது செல்போனில் தொடர்புக் கொண்டப்போது ரிங் சென்றநிலையில் அழைப்பை அவர் ஏற்கவில்லை.

இதையடுத்து மணிராஜ் நேற்று முன்தினம் முதல் தந்தையை தேடி அலைந்துள்ளார். அப்போது வடக்கு முருகநாதபுரம் பகுதியில் கரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் அங்குள்ள வணிக வளாகம்முன் தந்தையின்மொபட் நிற்பதை நேற்று கண்டு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

ரிங்சென்ற நிலையில்அழைப்பு ஏற்கப்படவில்லை. அதனால் சென்றுவிட்டார். காவலாளியிடம் மொபட் நிற்பது குறித்து கேட்டப்போது அவரும் அதுகுறித்து தெரியவில்லை எனக் கூறியுள்ளார். இதனால் பல்வேறு பகுதிகளில் தேடி அலைந்துள்ளனர்.

இன்று (ஜூன் 27ம் தேதி) காலை நண்பர்களுடன்தந்தை மொபட்நிற்கும் வணிக வளாகப் பகுதிக்கு வந்த மணிராஜ் தந்தையின் செல்போன்எண்ணுக்கு அழைத்துள்ளார். மீண்டும், மீண்டும் அழைத்து ரிங்டோன் ஓசை வருகிறதா? என சோதனையிட்டப்போது வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள லிப்டின் அடிப்பகுதியில் இருந்து ஓசை வந்துள்ளது. லிப்ட் அடித்தளப்பகுதிஅருகே சென்றப்போது துர்நாற்றம் வீசியுள்ளது.

உயிரிழந்தவர்

இதையடுத்து கரூர் நகர போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் லிப்டின் அடிப்பகுதியைத் திறந்துப் பார்த்தபோது லிப்டின் அடிப்பகுதியில்அமர்ந்த நிலையில்தாடையில் காயத்துடன்அருள்ராஜ் சடலமாகஇருந்துள்ளார்.

டிஎஸ்பி சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சுகந்திஆகியோர் சடலத்தைபார்வையிட்டு விசாரணை நடத்தினர். துர்நாற்றம் வீசுவதால் அருள்ராஜ் நேற்றுமுன்தினமே உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. சடலத்தை கைப்பற்றி கரூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

லிப்டின் கீழ்பகுதி கதவை திறக்கமுடியாது. அருள்ராஜ் கார்பெண்டர் என்பதால் கதவை திறந்து உள்ளே இறங்கினாரா? எதற்காகச் சென்றார்? எப்படி உயிரிழந்தார்? என்பது குறித்து கரூர் நகரப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வணிகவளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வுசெய்ய உள்ளனர். இரு நாட்களுக்குமுன் காணாமல் போனவர் லிப்டின் அடித்தளத்தில் அமர்ந்து நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x