தென்காசியில் வீட்டுக்கு தீ வைத்து சிறுமியை எரித்துக் கொல்ல முயற்சி: இளைஞர் கைது

தென்காசியில் வீட்டுக்கு தீ வைத்து சிறுமியை எரித்துக் கொல்ல முயற்சி: இளைஞர் கைது
Updated on
1 min read

முன்விரோதம் காரணமாக வீட்டுக்கு தீ வைத்து சிறுமியை எரித்துக் கொல்ல முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற முத்துக்குட்டி (23). இவருக்கும், சந்தியாவின் தந்தைக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தியாவின் வீட்டுக்குள் முத்துக்குமார் சென்றுள்ளார். வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து தீ வைத்து சேதப்படுத்தியுள்ளார். மேலும், பீரோவில் இருந்த 20 கிராம் நகையை திருடியுள்ளார்.

அந்த நேரத்தில் சந்தியாவின் 8 வயது மகள் வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் வாயைப் பொத்தி, கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார்.

இதனால், சிறுமி மயக்கமடைந்தார். பின்னர் அங்கிருந்த கட்டிலில் சிறுமியை தள்ளியுள்ளார். அப்போது, அருகில் உள்ள தீ சிறுமி மீது பற்றியுள்ளது.

இதனால் சிறுமி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, கத்திரிக்கோலால் சிறுமியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் சிறுமி மீண்டும் மயக்கமடைந்தார்.

இதையடுத்து, திருடிய நகைகளுடன் முத்துக்குமார் தப்பிச் சென்றுவிட்டார். வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அங்கு, ரத்தக் காயத்துடன் சிறுமி மயங்கிக் கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அவர், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் தென்காசி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிர் சேர்க்கப்பட்டு அங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிறுமி அளித்த தகவலின்பேரில், நடந்த சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாயார் செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் விசாரணை நடத்தி, குற்றச் செயலில் ஈடுபட அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தது, பொருட்களை தீ வைத்து எரித்தது, சிறுமியை கொல்ல முயன்றது, கொள்ளையடித்தல் போன்ற பிரிவுகளிலும், சிறுமியின் மீதான வன்கொடுமையில் ஈடுபட்டதால் போக்ஸோ சட்டத்திலும் வழக்கு பதிவு செய்து, முத்துக்குமாரை கைது செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in