தஞ்சாவூர் சுகாதாரத் துணை இயக்குநர் அலுவலகத்தில் புத்தாண்டுக்கு லஞ்சம்: ரூ.1.24 லட்சம் கைப்பற்றப்பட்டது

தஞ்சாவூர் சுகாதாரத் துணை இயக்குநர் அலுவலகத்தில் புத்தாண்டுக்கு லஞ்சம்: ரூ.1.24 லட்சம் கைப்பற்றப்பட்டது
Updated on
1 min read

தஞ்சாவூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் ரூ.1.24 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

தஞ்சாவூர் காந்திஜி சாலையில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் புத்தாண்டு தினத்தையொட்டி வியாழக்கிழமை இரவு உயர்நிலை அலுவலர்களைக் கீழ்நிலை அலுவலர்கள், பணியாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து லஞ்சம் கொடுப்பதாகப் புகார்கள் எழுந்தன.

இதன் பேரில், இந்த அலுவலகத்தில் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் கஜேந்திரன், தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் மனோகரன் உள்ளிட்டோர் வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு அலுவலகத்துக்கு வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, துணை இயக்குநர் ரவீந்திரன் மேஜையிலிருந்து ரூ. 1.17 லட்சம் ரொக்கமும், நிர்வாக அலுவலர் வெங்கடசுப்பிரமணியன் மேஜையில் இருந்த ரூ. 7,500 ரொக்கம், 4 கிராம் தங்கம் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும் 42 சால்வைகள், ஏராளமான இனிப்புப் பொட்டலங்கள் மற்றும் பழங்களையும் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in