தேனியில் கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

தேனியில் கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

தேனியில் கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி சின்னமனூரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கற்பகவள்ளி (19). கற்பகவள்ளிக்கு 14 வயதானபோதே அவரை சுரேஷ் திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு திவ்யசுந்தரி, சுந்தரி என்ற பெயரில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கற்பகவள்ளி 3-வதாக கர்ப்பம் தரித்திருந்தார்.

கற்பகவள்ளி மீது சந்தேகம் கொண்ட சுரேஷ் அவரைக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் 2015 ஜூன் 21-ம் தேதியன்று சுரேஷ் கற்பகவள்ளியைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். உடம்பில் சிகரெட்டால் சுட்டும், தாலிக்கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்துள்ளார்.

கற்பகவள்ளியின் வயிற்றில் அடித்ததில் அவரது கரு கலைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. தேனி நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்த நிலையில், சுரேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது.

சுரேஷுக்கு இந்திய தண்டனைச் சட்டங்கள் 302, 316-ன் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 302-வது சட்டப்பிரிவின் கீழ் சாகும்வரை தூக்கிலிடப்பட வேண்டும். 316 சட்டப்பிரிவின் கீழ் 10 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in