காரைக்குடி அருகே குழந்தையைக் கடத்தி நாடகமாடிய பாட்டி: துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீஸார்
காரைக்குடி அருகே பேரனைக் கடத்தி நாடகமாடிய பாட்டியிடமிருந்து குழந்தையை மீட்ட போலீஸாருக்கு டிஎஸ்பி பாராட்டு தெரிவித்தார்.
காரைக்குடியில் பிறந்து முப்பது நாளே ஆன தனது மகன் வழி பேரக்குழந்தையை கடத்திய பெண்ணிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை முதல் வீதியில் வசித்து வருபவர் தைனீஸ் மேரி - அருண் ஆரோக்கியம் தம்பதி. கடந்த ஓராண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டதால் இரு வீட்டாரின் எதிர்ப்பால் தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 30 நாட்களுக்கு முன்பு காதல் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை அருண்ஆரோக்கியத்தின் தாயார் ராஜேஸ்வரி, குழந்தையை தனது கணவரிடம் கான்பிக்க வேண்டும். அப்போதுதான் அவர் மனம் இறங்கி உங்களை வீட்டில் சேர்த்துக் கொள்வார் எனக் கூறி தைனீஸ் மேரியிடம் குழந்தையை வாங்கிச் சென்றுள்ளார்.
மூன்று மணி நேரம் கழித்தும், குழந்தையை தன்னிடம் இருந்து யாரோ அடையாளம் தெரியாத நபர் பிடிங்கிச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தைனீஸ் மேரி - அருண் ஆரோக்கியம் தம்பதியினர் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காரைக்குடி வடக்கு இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், எஸ்.ஐ., தினேஷ் தலைமையிலான போலீSaaர் குழந்தையின் பாட்டியான ராஜேஸ்வரியிடம் விசாரித்தனர்.
அவர் முன்னுக்குp பின் முரணாக பேசினார். இதனால், சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தியதில் வேறு ஒரு நபரிடம் குழந்தையைக் கொடுத்தது தெரிய வந்தது.
அதிகாலை 3:00 மணிக்கு குழந்தையை மீட்டு அதன் தாயிடம் ஒப்படைத்தனர். நாடகமாடிய பாட்டியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையை விரைந்து மீட்ட எஸ்.ஐ., தினேஷை காரைக்குடி டி.எஸ்.பி., அருண் பாராட்டினார்.
