செஞ்சி அருகே மனைவி விஷம் அருந்தி தற்கொலை; தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை

குணசாலி - முத்துகிருஷ்ணன்
குணசாலி - முத்துகிருஷ்ணன்
Updated on
1 min read

செஞ்சி அருகே மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதை தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை செய்துகொண்டார்.

செஞ்சியை அடுத்த ஆர்.நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (64). இவரது மனைவி குணசாலி (59). முத்துகிருஷ்ணன் நேற்று (நவ. 30) மதியம் சாப்பிடும்போது குழம்பு சரியில்லை என மனைவி குணசாலியை திட்டி உள்ளார். இதில் மனவேதனை அடைந்த குணசாலி பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து உள்ளார்.

உடனடியாக அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு வரும் வழியில் குணசாலி இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இரவு வீட்டுக்குச் சென்ற முத்துகிருஷ்ணன் மனைவி குணசாலி இறந்துவிட்டதை நினைத்து மனவேதனை அடைந்து நள்ளிரவு 1 மணிக்கு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயக்கமடைந்துள்ளார்.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்து வீட்டினர் முத்துகிருஷ்ணனை உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முத்துகிருஷ்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

முத்துகிருஷ்ணன் அவரது மனைவி குணசாலி ஆகியோரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in