

விருதுநகரில் வேளாண் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி பாரதி நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (53). ராமநாதபுரத்தில் மேலான அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சீதாலட்சுமி (45). மகன் சிவசங்கர் (26) ஆகியோர் கடந்த 6ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு மகள் சிவமதி வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பினார்.
அப்போது இரும்பு கேட் மற்றும் கதவுகளை இரும்புக் கம்பியால் நெம்பி உடைக்கப்பட்டுள்ளன. மேலும் வீட்டுக்குள் அறையில் பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தன.
அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் இதுகுறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.