லாரி மீது பேருந்து மோதியதில் தெலங்கானாவில் 6 பேர் உயிரிழப்பு

லாரி மீது பேருந்து மோதியதில் தெலங்கானாவில் 6 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்திலிருந்து ஆந்திர மாநிலம் ஏலூருக்கு செவ்வாய்க் கிழமை இரவு 42 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் சொகுசு பேருந்து புறப்பட்டது.

இப்பேருந்து, நேற்று அதிகாலை 4 மணியளவில் கோதாடா அருகே துவார குண்டா எனும் இடத்தில் அதிவேகமாக சாலை வளைவில் திரும்பும் போது, முன்னால் இரும்பு லோடுடன் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில், பேருந்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து நடந்ததும் பேருந்து ஓட்டுநர் மல்லிகார்ஜுனா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த 20 பயணிகள் கோதாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கோதாடா போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் மல்லிகார்ஜுனா தூக்க கலக்கத்தில் இருந்ததாலும், அதிவேகமாக பேருந்தை ஓட்டியதாலும் தான் விபத்து நடந்தது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோதாடா போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி மீது பேருந்து மோதியதில் தெலங்கானாவில் 6 பேர் உயிரிழப்பு
நேபாள வெள்ளத்தில் 100 பேர் உயிரிழப்பு: கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேர் மீட்பு?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in