தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக திருப்பூரில் பதுங்கியிருந்த 6 வங்கதேசத்தினர் கைது

திருப்பூரில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர்.

திருப்பூரில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர்.

Updated on
1 min read

திருப்பூர்: தீ​விர​வாத அமைப்​புடன் தொடர்​பில் இருந்​த​தாக, திருப்​பூரில் பதுங்​கி​யிருந்த 6 வங்​கதேசத்​தினரை டெல்லி போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

பாகிஸ்​தான் பயங்​கர​வாத அமைப்​புக்கு ஆதர​வாக​வும், பாது​காப்பு படை​யினரை அச்​சுறுத்​தும் வகை​யிலும் டெல்​லி​யில் சமீபத்​தில் சுவரொட்டி ஒட்​டப்​பட்​டது. இதை ஒட்​டிய​வருக்​கும், திருப்​பூரில் ஊடுரு​வி​யுள்ள வங்​கதேசத்​தினருக்​கும் தொடர்பு இருப்​ப​தாக டெல்லி போலீ​ஸாருக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, ஆய்​வாளர் தலை​மை​யில் 7 பேர் கொண்ட தனிப்​படை போலீ​ஸார் சில நாட்​களுக்கு முன்​னர் திருப்​பூர் வந்​தனர்.

தொடர்ந்​து, அம்​மா​பாளை​யம், பல்​லடம், ஊத்​துக்​குளி​யில் தங்​கி​யிருந்த 6 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​கள் வங்​கதேசத்தை சேர்ந்த மிஜனுார் ரகு​மான் (33), முகமது சாபேட் (35), உமர்​(32), முகமது லிட்​டன்​(40), முகமது ஜாகீத்​(40), முகமது உஜால்​(29) என்​பதும், பாது​காப்​புப் படைக்கு எதி​ராக சுவரொட்டி ஒட்​டிய​வருடன் தொடர்​பில் இருப்​பதும் தெரிய​வந்​தது. இதையடுத்​து, திருப்​பூர் ஜுடீசி​யல் மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றம் எண்​.3-ல் அவர்​களை ஆஜர்​படுத்​திய போலீ​ஸார், பின்​னர் சென்னை சென்​று, அங்​கிருந்து அனை​வரை​யும் டெல்​லிக்கு அழைத்​துச் சென்​றனர்.

இதுகுறித்து திருப்​பூர் போலீ​ஸார் கூறும்​போது, “டெல்​லி​யில் ஒட்​டப்​பட்ட சுவரொட்​டி​யில் காஷ்மீரை இரண்​டாகப் பிரிக்க வேண்​டும் என்று குறிப்​பிட்​டு, ஹிஸ்​புல் முஜாஹதீன் அமைப்​பைச் சேர்ந்​தவர்​களின் படங்​கள் இடம் பெற்​றிருந்​தன. பயங்​கர​வாத அமைப்பை சேர்ந்த சிலரின் உத்​தர​வின்​பேரில் போஸ்​டர்​களை ஒட்​டியது தெரிந்​தது. போஸ்​டர் ஒட்​டிய நபர்​களுக்​கும், திருப்​பூரில் சட்​ட​விரோத​மாக ஊடுரு​வி​யுள்ள வங்​கதேசத்தை சேர்ந்த 6 பேருக்​கும் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​த​தால், அவர்​கள் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிட​மிருந்து செல்​போன்​கள், போலி​யான ஆவணங்​கள் உள்​ளிட்​ட​வற்றை டெல்லி போலீ​ஸார் பறி​முதல் செய்​துள்​ளனர்" என்​றனர்.

<div class="paragraphs"><p>திருப்பூரில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர்.</p></div>
காந்தியை மக்கள் மனதிலிருந்து அகற்ற திட்டம்: பாஜக அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in