சதுரகிரியில் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் திடீர் உயிரிழப்பு
சதுரகிரியில் பக்தர் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இன்று திடீரென உயிரிழந்தார்.
விருதுநகர் மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு பிரசித்தி பெற்ற அருள்மிகு சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் திருக்கோயில்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில் ஐப்பசி மாதம் பௌர்ணமி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு கடந்த 28 ஆம் தேதி முதல் இன்று வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இன்று ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு காலையிலிருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் கோணத்தலைவாசல் என்னும் பகுதியில் சென்ற போது ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி தெருவை சேர்ந்த தங்கப்பாண்டி (34) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது உடலை போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாப்டுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
