சிவகங்கை அருகே சாலை விபத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 2 பேர் மரணம்

சிவகங்கை அருகே சாலை விபத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 2 பேர் மரணம்
Updated on
1 min read

சிவகங்கை அருகே சாலை விபத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரன் உட்பட 2 பேர் மரணமடைந்தனர்.

சிவகங்கை கொட்டகுடி தெருவைச் சேர்ந்தவர் பா.மனோகரன் (66). திமுவைச் சேர்ந்த இவர் 1989 முதல் 1991 வரை சிவகங்கை தொகுதி எம்எல்ஏவாக இருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு அவரும், கோகுலேகால் தெருவைச் சேர்ந்த அவரது நண்பர் தைபுதீனும் இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு சென்றனர். படமாத்தூர் அருகே சென்றபோது எதிரே கேரளாவில் இருந்து காய்கறி ஏற்றி வந்த மினி லாரி மோதியது.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து பூவந்தி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மனோகரன் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும், பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இவரது மனைவி சாந்தி சிவகங்கை நகராட்சித் தலைவராக இருந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in