கைதியை பார்க்க கஞ்சாவுடன் சிறைக்கு சென்ற இளம்பெண் கைது

கைதியை பார்க்க கஞ்சாவுடன் சிறைக்கு சென்ற இளம்பெண் கைது
Updated on
1 min read

பூந்தமல்லி கிளை சிறையில் கைதியை பார்க்க கஞ்சாவுடன் சென்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, கரையான்சாவடியில் கிளை சிறை செயல்பட்டு வருகிறது. இந்த சிறையில், கடந்த ஆண்டு எண்ணூர் பகுதியில் நடந்த கொலை வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்ட வடசென்னை பகுதியை சேர்ந்த குள்ள கார்த்திக் என்ற கார்த்திக் (25) அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, கார்த்திக்கை பார்ப்பதற்காக, அவரது உறவினரான வளர்மதி(21) என்பவர் கிளைச் சிறைக்கு சென்றார். அப்போது, வளர்மதி கொண்டு சென்ற பிஸ்கட், பழம் ஆகியவற்றை போலீஸார் சோதனை செய்தனர். அச்சோதனையில், பிஸ்கட்டுக்குள் 50 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த பூந்தமல்லி போலீஸார், வளர்மதியை கைது செய்தனர். பிறகு, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in