

மீனம்பாக்கம் காவல் நிலைய வழக்கின் பழைய குற்றவாளி, மாங்காடு ஜான்பால் மீது பல வழக்குகள் உள்ளன. இவரை ஆலந்தூர் மாஜிஸ்திரேட் முன்புஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது, ஜான்பால், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டவர், பிளேடைவாயில் போட்டு விழுங்கியதால், நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்தார்.
வாயில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட அவரை மீட்ட போலீஸார், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கைதிக்கு, பிளேடு எப்படி கிடைத்தது என்பதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.