Last Updated : 03 Sep, 2020 10:31 AM

 

Published : 03 Sep 2020 10:31 AM
Last Updated : 03 Sep 2020 10:31 AM

ஆந்திர மாநிலத்திலிருந்து மதுரைக்கு லாரியில் கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது

ஆந்திராவிலிருந்து மதுரைக்கு லாரியில் கஞ்சா கடத்தியதாக லாரி ஓட்டுநர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக லாரியில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்படுவதாக போதை நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினருக்கு நேற்று (செப்.2) பிற்பகல் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, டி.எஸ்.பி. பழனி தலைமையிலான காவல்துறையினர் விக்கிரவாண்டி சுங்கச்சாவடிக்கு விரைந்து சென்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்றை மடக்கி சோதனையிட்டதில், அதன் பின்பக்கம் 56 பொட்டலங்களில்112 கிலோ கஞ்சா இருந்தது. இதுதொடா்பாக, மதுரையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகானந்தம் (31), உதவியாளா் பிரபாகரன் (33) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஆந்திராவிலிருந்து மதுரைக்கு கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சா பொட்டலங்கள், லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்து லாரி ஓட்டுநா் முருகானந்தம், உதவியாளா் பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சுமாா் ரூ.12 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x