

பழநி தேவாங்கர் தெருவில் உள்ள சில வீடுகள் முன்பு மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளை வைத்துச் சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி 11-வது வார்டு பகுதி தேவாங்கர் தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் வசிக்கும் சரவணன், மணிகண்டன், பாக்கியம் உள்ளிட்டோரி வீடுகள் உள்பட சிலரது வீடுகள் முன்பு மனித மண்டை ஓடு மற்றும் கை, கால் எலும்புகள் வைக்கப்பட்டிருந்தது.
மாந்த்ரீகம் செய்யப்பட்டதுபோல் மண்டை ஓடுகள் வைக்கப்பட்டிருந்ததால் அதிகாலையில் எழுந்து பார்த்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
தகவலறிந்த பழநி நகர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில் தேவாங்கர்தெருப் பகுதியில் சில இளைஞர்கள் அமர்ந்துகொண்டு அப்பகுதியில் சென்றுவரும் பெண்களை கேலி செய்வதாகவும், அவர்களை கண்டித்ததால் இதுபோல் செயல்களில் அவர்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்புண்டு என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.