Last Updated : 04 Aug, 2020 09:25 PM

 

Published : 04 Aug 2020 09:25 PM
Last Updated : 04 Aug 2020 09:25 PM

தேவகோட்டையில் வீட்டை காலி செய்ய சொல்லி மாமியார் வற்புறுத்தியதால் மருமகள் தற்கொலை: ஆபத்தான நிலையில் 3 குழந்தைகள் 

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வீட்டை காலி செய்யச் சொல்லி மாமியார் வற்புறுத்தியதால் பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது மூன்று குழந்தைகள் ஆபத்தானநிலையில் உள்ளனர்.

தேவகோட்டை சிதம்பரநாதபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் வசந்தா. இவரது வளர்ப்பு மகன் ராமதாஸ் (40). அவரும், அவரது மனைவி பிரியதர்ஷினி (36), மகள் பர்வதவர்த்தினி (16), மகன்கள் திருநீலகண்டன் (14), ஹரிகிருஷ்ணன் (12) ஆகியோருடன் வசந்தா வீட்டில் வசித்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் ராமதாஸ் இறந்தார்.

இந்நிலையில் மாமியார் வசந்தா, அவரது சகோதரர் ராஜேந்திரன் ஆகியோர் பிரியதர்ஷினியிடம் வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு ராஜேந்திரன் மிரட்டி, பிரியதர்ஷினியின் மகளைத் தாக்கியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த பிர்யதர்ஷனி இன்று காலை தனது மூன்று குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு தானும் அருந்தினார்.
சம்பவ இடத்திலேயே பிர்யதர்ஷனி இறந்தார்.

ஆபத்தான நிலையில் இருந்த மூன்று குழந்தைகளையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேவகோட்டை நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேபிஉமா வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x