டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு

டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனாவைக் கட்டுப்படுத்த இம்மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆகஸ்ட் மாதம் வரும் 4 ஞாயிறு கிழமைகளிலும் எந்த தளர்வுகளும் இல்லாமல் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இலந்தைகுளம் பகுதியில் இன்று முழு ஊரடங்கை மர்ம சாதகமாக பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 350 க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை திருடிச்சென்றனர்.

இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் கடையைத் திறக்கச் சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு மது பாட்டில்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in