

சிவகங்கை மாவட்டம் கல்லலில் டாஸ்மாக் கடையை ஓட்டையிட்டு திருடிய மதுபாட்டிகளை திருடர்கள் மூட்டை கட்டி எடுத்து சென்றனர். அவர்கள் வாகனச் சோதனையின்போது போலீஸாரை கடப்பாறையால் தாக்க முயன்றதால் சிக்கினர்.
கல்லல் ரயில்வே கேட் அருகே நேற்றுமுன்தினம் இரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை போலீஸார் தடுத்து நிறுத்தியபோது, அவர்கள் கடப்பாறையால் தாக்க முயன்றனர்.
இருவரையும் மடக்கிபிடித்தபோது, சாக்கு மூட்டையில் 30-க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்கள் இருந்தன.
மேலும் விசாரணையில் அவர்கள் கல்லல் காட்டுப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பின்பக்க சுவரில் துளையிட்டு 30-க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்களை திருடியது தெரியவந்தது.
ஏற்கெனவே அதே கடையில் 2019-ம் ஆண்டு கடையின் பூட்டை உடைத்து ரூ.32,400 மதிப்புள்ள மதுபாட்டில்கள், அதேபோல் கடந்த 14-ம் தேதி ரூ.11,240 மதிப்பு்ள மதுப்பாட்டில்கள் திருடப்பட்டன.
பிடிப்பட்ட இருவருக்கும் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதால் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.