

.பல்லடத்தில் குடிபோதையில் இளைஞர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறி, காவல்துறையினர் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக, பல்லடம் காவல்துறையினர் இன்று (ஜூலை 4) கூறியதாவது:
"மேற்கு பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (30). கடந்த 1-ம் தேதி மகாலட்சுமி நகரில் பொது இடத்தில் காவல்துறையினர் இருவர் தாக்கியதாகக் கூறி, திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக பல்லடம் காவல்துறையினர் விசாரித்தனர். இதையடுத்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ரமேஷ் (33) மற்றும் பல்லடம் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதயகுமார் (33) ஆகிய இருவர் குடிபோதையில் சரவணன் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து, காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல் இன்று (ஜூலை 4) உத்தரவிட்டார்".
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.