இரண்டு துப்பாக்கிகள், 100 தோட்டாக்களுடன் காரில் வந்த 5 பேரிடம் விசாரணை

இரண்டு துப்பாக்கிகள், 100 தோட்டாக்களுடன் காரில் வந்த 5 பேரிடம் விசாரணை
Updated on
1 min read

சிவகங்கையில் இரண்டு துப்பாக்கி, 100 தோட்டாக்களுடன் காரில் வந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க சிவகங்கை, மதுரைமுக்கு சோதனை சாவடியில் வாகனங்களில் வருவோரை விசாரித்தபிறகே போலீஸார் அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அவ்வழியாக வந்த காரை மறித்து விசாரணை நடத்தினர். காரில் இருந்த 7 பேரும் முன்னுக்கு முரணான தகவல்களை அளித்தனர். மேலும் விசாரித்து கொண்டிருக்கும்போதே 2 பேர் காரில் இருந்து இறங்கி தப்பியோடினர்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸார் காரை சோதனையிட்டனர். அதில் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 100 -க்கும் மேற்பட்ட தோட்டக்கள் இருந்தன. இதையடுத்து 5 பேரையும் பிடித்து சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் மோகன் விசாரித்து வருகிறார்.

இதில் மூன்று பேர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் சிவகங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் அரசனூர் பகுதியில் மான், முயல் வேட்டையில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். அவர்கள் கூறிய தகவல் உண்மையா? (அ) வேறு ஏதும் காரணத்திற்காக வந்தார்களா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 100 தோட்டக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இரவில் துப்பாக்கிகளுடன் இளைஞர்கள் பிடிபட்ட சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in