ராமநாதபுரம் எஸ்.பி.,யின் செல்போனுக்கு ஆபாசப் படம் அனுப்பிய இளைஞர் கைது 

ராமநாதபுரம் எஸ்.பி.,யின் செல்போனுக்கு ஆபாசப் படம் அனுப்பிய இளைஞர் கைது 
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு கைப்பேசி எண்ணுக்கு ஆபாசப் படம் அனுப்பிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார், பொதுமக்கள் சட்டம், ஒழுங்கு தொடர்பான புகார்கள், சட்டவிரோத செயல்கள் ஆகியவற்றை தெரிவிக்க, 9489919722 என்ற சிறப்ப கைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த எண்ணிற்கு கடந்த 17-ம் தேதி வாட்ஸ்அப்பில் ஆண் நிர்வாண ஆபாசப் படம் வந்துள்ளது. போலீஸார் விசாரணையில் அப்படத்தை கோயமுத்தூரைச் சேர்ந்தவர் அனுப்பியது தெரிய வந்தது.

அதனையடுத்து இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் முதல்நிலைக் காவலர் கண்ணன், நகர் போலீஸில் புகார் அளித்தார்.

அதனையடுத்து நேற்று இரவு ஆபாசப் படத்தை அனுப்பிய கோயமுத்தூர் சரவணம்பட்டி சிவானந்தபுரம் மாருதிநகரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரேம் கிரண்(27) என்பவரை நகர் போலீஸார் கைது செய்தனர். .

பிரேம் கிரணிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் தவறுதலாக அப்படத்தை அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார் இதையடுத்து அவர் மீது தொழில்நுட்பத்தை தவறுதலாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பின்னர் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

ராமநாதபும் மாவட்டத்தில் போதைப்பொருள், தங்கம் உள்ளிட்டவை கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு
புகார்கள் வரை காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு கைபேசி எண்ணிற்கு பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த கைபேசி எண்ணுக்கு ஆபாசப் படத்தை அனுப்பியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in