

தேனியில் தனியார் நிறுவன மேலாளரை வழிமறித்து கொலை செய்து, ரூ.22 லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தேனி, பென்னி குவிக் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (34). தனியார் வாகன விற்பனை நிறுவன மேலாளராகப் பணி யாற்றினார். நேற்று முன்தினம் வங்கியில் ரூ. 22 லட்சம் எடுத்துச் சென்றவரை புறவழிச் சாலையில் சிலர் கொலை செய்து பணத்தை பறித்துச் சென்றனர்.
குற்றவாளிகளை பிடிக்க காவல் துணைக் கண் காணிப்பாளர் முத்துக்குமார், ஆய்வாளர் விக்டோரியா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வங்கி மற்றும் புறவழிச் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அருண் குமாரின் செல்போனில் வந்த விவரங்கள் சேகரிக்கப்பட் டுள்ளன. உடன் பணிபுரியும் 4 பேரிடமும் விசாரணை நடக்கிறது. வழக்கமான பாதையில் செல் லாமல் புறவழிச் சாலையில் அருண்குமார் சென்றது ஏன் எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.