காசியிடம் 2-வது நாளாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை; தனிப்படையினரும் தகவல்கள் சேகரிப்பு

காசியிடம் 2-வது நாளாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை; தனிப்படையினரும் தகவல்கள் சேகரிப்பு

Published on

நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி என்பவர் பெண்களை முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பெண்களிடம் பழகி பண மோசடியில் ஈடுபட்டதாக குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

காசியின் நண்பரான டேசன் ஜினோவும் கைது செய்யப்பட்டார். காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. காசி, மற்றும் டேசன்ஜினோவை 5 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதைத்தொடர்ந்து இருவரையும் சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 2-வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது.

சிபிசிஐடி டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து வந்த தனிப்படை போலீஸாரும் காசி பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரம், மற்றும் தகவல்களை சேகரிததனர்.

அப்போது காசியுடன் தொடர்பில் இருந்த அரசியல பிரமுகர்கள், தொழில் அதிபர்களின் விவரங்களையும் அவர்கள கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in