Published : 11 Jun 2020 09:05 PM
Last Updated : 11 Jun 2020 09:05 PM

மதுரையில் சமையலுக்கு விற்கப்பட்ட தீப எண்ணெய்: உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வில் அதிர்ச்சி

எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லா தொந்தரவுகள் தொலைந்து போகும் என்பார்கள்.

ஆனால், மதுரையில் இந்த தீபங்களை ஏற்றுவதற்கான விளக்கு எண்ணெய் (lighting oil) தீப எண்ணெய் (Deepa Oil) விற்பனையிலும் முறைகேடு நடப்பதாகவும், அவற்றை சமையல் எண்ணெய் என்று கூறி ஏமாற்றி விற்பதாகவும், தரம் குறைந்த விளக்கு எண்ணை தயாரித்து விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்தப் புகாரை தொடர்ந்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சோமசுந்தரம் மற்றும் அவரது குழுவினர் எண்ணெய் கடைகளில் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சோமசுந்தரம் கூறியதாவது:

விளக்கு எண்ணெய், தீபம் எண்ணெய் (lighting oil, Deepa oil) பாக்கெட்டுகளில்

ஆங்கிலத்தில் லைட்டிங் ஆயில், தீப ஆயில் என்று குறிப்பிட்டுள்ளனர். பாமரர்களும் புரியும் வகையில் பாக்கெட்டுகளில் தமிழில் விளக்கு ஆயில், தீப ஆயில் என்று எழுத வேண்டும். ஆனால், மக்கள் அவசரத்தில் பார்க்க மாட்டார்கள் என்பதால் சமையலுக்கும் இந்த ஆயிலை ஏமாற்றி விற்றுவிடுகிறார்கள்.

அதனாலலே, கோயில்கள் திறக்கப்படாத இந்த நேரத்திலே இந்த விளக்கு எண்ணெய், தீப எண்ணெய் பாக்கெட்டுகளை அதிகளவு ஸ்டாக் வைத்து்ளளனர். அதன் ரகசியம் இதுதான்.

சமையலுக்குப் பயன்படுத்தும் நல்லெண்ணெயை தான் விளக்கு எரிய வைக்கவும், தீபம் ஏற்றவும் பயன்படுத்த வேண்டும். ஆனால், இவர்கள்முந்திரி எண்ணெய் கலந்த பாமாயில் எண்ணெயைதான் விளக்கு எண்ணெய், தீபம் ஆயில் என்று விற்கிறார்கள்.

மக்கள் கோயில்களில் தீபம், விளக்கு ஏற்றிய எண்ணெயை அபிஷேகமாக கருதி சில நேரங்களில் எடுத்து வாயில் தொட்டுக் கொள்வார்கள். குடிப்பார்கள். குறிப்பாக சாமிக்கு படைக்கும் நெய்யை மக்கள் சாப்பிடுவார்கள். பூஜைக்கு தனி நெய், சாப்பிடுவதற்கு தனி நெய் என்று தனியாக இல்லை.

பூஜைகளில் பயன்படுத்தும் அனைத்தும் பொருட்களும் சாப்பிடக்கூடிய வகையில் தரமாக இருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறையில் தனிச்சட்டமே உள்ளது. மேலும், பூஜைப்பொருட்கள் உணவுப்பொருட்கள் பட்டியலில் உள்ளது.

அதனால், தரம் குறைந்த விளக்கு எண்ணெய், தீபம் எண்ணெய்களை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். வந்தபிறகு தவறு செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x