

மதுரை கரும்பாலையைச் சேர்ந்த முருகன்(40) என்பவர் சிறுநீரக கோளாறு காரணமாக மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
2 நாட்களுக்கு முன்பு அதிகாலையில் உறவினர் என்ற போர்வையில், வார்டுக்குள் புகுந்த 5 பேர் சிகிச்சையில் இருந்த முருகனை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர்.
இது தொடர்பாக மதிச்சியம் போலீஸார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
மருத்துவமனை வார்டுக்குள் புகுந்து நோயாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரை காவல்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் முருகன் சம்பவத்தன்று அண்ணா பேருந்து நிலைய மருத்துவமனையில் பணியில் இருந்த சுரேஷ்குமார், லட்சுமணன் ஆகிய இரு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து, காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.