வெளிநாட்டில் இருக்கும் காசியின் நண்பரை கைது செய்ய விமான நிலையங்களுக்கு நோட்டீஸ்

வெளிநாட்டில் இருக்கும் காசியின் நண்பரை கைது செய்ய விமான நிலையங்களுக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் காசி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களையும் ஏமாற்றியது எப்படி என்பது குறித்து அவரே கொடுத்த வாக்குமூலத்தைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், காசி கூறிய தகவலின் அடிப்படையில் வெளிநாட்டில் இருக்கும் காசியின் நண்பரை கைது செய்ய விமான நிலையங்களுக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் உட்பட ஏராளமான இளம் பெண்களிடம் சமூக வலைத்தளங்களில் பழகி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த காசி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து போலீஸார் அவரை முதற்கட்டமாக நீதிமன்ற உத்தரவுபடி 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த முதல்கட்ட விசாரணையில் காசி போதிய தகவல்களை தெரிவிக்க வில்லை. அவரின் கூட்டாளிகள் 2 பேரின் பெயர்களை மட்டும் காசி தெரிவித்திருந்தார்.

இதில் நாகர்கோவிலை சேர்ந்த டைசன் ஜினோ என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவரின் மற்றொரு கூட்டாளி வெளிநாட்டில் (துபாய்) உள்ளார். அவரை பிடிக்க விமான நிலையங்களுக்கு போலீஸார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட காசி இரண்டாம் கட்டமாக 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து கன்னியாகுமரி மகளிர் காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் சாந்தியால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்த விசாரணையின் போது காசியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் பென் டிரைவில் இருக்கும் வீடியோக்களில் உள்ள பெண்கள் குறித்து காசியிடம் விசாரித்ததாகத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in