Last Updated : 21 May, 2020 08:50 PM

 

Published : 21 May 2020 08:50 PM
Last Updated : 21 May 2020 08:50 PM

தொண்டி அருகே 9 பேர் கொண்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது: ரூ.3 கோடி மதிப்பு போதைப் பொருள்கள் பறிமுதல் 

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 9 பேர் கொண்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ. 3 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வீரசங்கிலிமடம் கிராமத்தில் கடந்த 15-ம் தேதி இலங்கைக்கு கடத்த இருந்த ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 37 செம்மரக்கட்டைகளை திருவாடானை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையிலான போலீஸார் பறிமுதல் செய்து, அதில் தொடர்புடைய 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் இன்று திருவாடானையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எனது சிறப்பு எண்ணிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தோம்.

அதன்பின்னர் டிஎஸ்பி புகழேந்தி தலைமையில், தனிப்பிரிவு ஆய்வாளர் ஜான்பிரிட்டோ உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதில் ஒரு கும்பல் வட மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து, தொண்டியிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தைச் சேர்ந்த அப்துல்ரஹீம்(49), அஜ்மல்கான்(48), சூராணத்தைச் சேர்ந்த அபுல்கலாம் ஆசாத்(23), தேவகோட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார்(44), ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த அருள்தாஸ்(43), வீரசங்கிலிமடத்தைச் சேர்ந்த முத்துராஜா(38), கருமொழியைச் சேர்ந்த கேசவன்(42), சோளியக்குடியைச் சேர்ந்த அப்துல்வஹாப்(36), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த அஜ்மல்கான்(42) ஆகியோரை கைது செய்துள்ளோம்.

அவர்களிடம் இருந்து ரூ. 3 கோடி மதிப்புள்ள மெத்தாகொலைன், ஆம்பெட்டாமைன், ஹெராயின், ஓபியம் உள்ளிட்ட போதை பொருட்கள், ரூ.2.50 லட்சம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x