ராஜபாளையம் அருகே 130 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் அழிப்பு: ஒருவர் கைது 

ராஜபாளையம் அருகே 130 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் அழிப்பு: ஒருவர் கைது 
Updated on
1 min read

ராஜபாளையம் அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய நபரை மதுவிலக்கு போலீஸார் கைது செய்தனர்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரம் பகுதியில் பூவையார் வயது 45 என்பவர் கள்ளச்சாராய ஊறல் போட்டிருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த ரகசிய தகவலின் பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு டிஎஸ்பி ஸ்டீபன் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பானுமதி மற்றும் காவலர்கள் கணபதி சுந்தரநாச்சியார்புரம் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பூவையார் என்பவர் ஒரு தென்னந்தோப்பில் குழிதோண்டி பேரலில் 130 மீட்டர் கள்ளச் சாராய ஊறல் போட்டு வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் 7 லிட்டர் சாரயம் காய்ச்சி தனியாக ஒரு கேனில் வைத்துள்ளார்.

இந்த இரண்டையும் பறிமுதல் செய்த போலீஸார் கள்ளச்சாராய ஊறலை அங்கேயே அளித்து விட்டு அதற்குப் பயன்படுத்திய பானை கேன் மற்றும் 7 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு காவல் நிலைத்திற்கு கொண்டு சென்றனர்.

பூவையார் மீது வழக்கு பதிவு செய்து மதுரை சிறையில் அடைத்தனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in