தென்காசியில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதி 3 பேர் உயிரிழப்பு

தென்காசியில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதி 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

தென்காசி அருகே விவசாய வேலைக்காக நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில் 3 பேரும் உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளத்தைச் சேர்ந்தவர்கள் மாடசாமி (59), மருதையா என்பவரது மனைவி துரைச்சி (55), முத்துப்பாண்டி எனப்பவரது மனைவி பொன்னம்மாள் (60).

இவர்கள், விவசாய வேலைக்காக இன்று காலையில் வீரகேரளம்புதூர் நோக்கி சாலையோரம் நடந்து சென்றுகொண்டு இருந்தனர்.

அப்போது, முக்கூடலில் இருந்து அகரக்கட்டு நோக்கிச் சென்ற சொகுசுக் கார் அவர்கள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். சிறிது நேரத்தில், சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வீரகேரளம்புதூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலங்களை மிட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், வழக்கு பதிவு செய்து, காரை ஓட்டிச் சென்ற அகரக்கட்டு பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் அந்தோணிசாமி என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in