Last Updated : 21 Apr, 2020 02:21 PM

 

Published : 21 Apr 2020 02:21 PM
Last Updated : 21 Apr 2020 02:21 PM

கரோனா ஊரடங்கால் தென்மாவட்டங்களில் குறைந்த விபத்து உயிரிழப்பு: மே 3-க்குப் பின்னரும் குறையும் என காவல்துறை நம்பிக்கை

கரோனா ஊரடங்கால் தென்மாவட்டங்களில் விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளன. மே 3-ம்தேதிக்கு பிறகும் விபத்துகள் குறையும் என, போலீஸார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பிறபிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் போலீஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.

இதையொட்டி அத்தியாவசிய வாகனங்கள் தவிர, பிற வாகனங்களுக்கு அனுமதியில்லை. ஆனாலும், தேவையின்றி வாகனங்களில் வெளியில் சுற்றிய நபர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.

வாகனங்களைப் பறிமுதல் செய்கின்றனர். ஊரடங்கு காலத்தில் தென்மாவட்டத்தில் இதுவரை 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும், 27 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுரை நகரில் 4, 500க்கும் மேற் பட்ட வழக்குகளும், 3ஆயிரம் வாகனங்கள் வரையிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் பார்த்தால் மதுரை நகர் உட்பட தென் மாவட்டங்களில் விபத்துக்கள் என்பது மிக குறைவாகவே உள்ளது.

தென்மாவட்ட அளவில் கடந்த 2019 ஏப்ரல் மாதம் வரை 3750 விபத்துக்களில் 764 பேர் உயிரிழந்துள்ளனர். 2020 ஏப்ரல் வரை 2921 விபத்துக்களில் 500க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் கடந்த 24-ம் தேதி முதல் இதுவரை 20க்கும் மேற்பட்ட விபத்துக்களில் ஓரிருவர் இறந்துள்ளனர். மதுரை நகரில் நடந்த சுமார் 5 விபத்துக்களில் ஒருவர் மட்டும் மரணத்தை தழுவியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த ஊரடங்கு உத்தரவால் விபத்துக்களும், அதன்மூலம் ஏற்படும் உயிரிழப்பும் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு ஊரடங்கு ஒரு காரணமாக இருந்தாலும், 3ம்தேதிக்கு பிறகு இயல்பு நிலை திரும்பினாலும், வாகன போக்குவரத்து குறைய வாய்ப்புள்ளது.

கோடை சுற்றுலா செல்வது, தேவை யின்றி வாகனங்களில் வெளியூர் செல்வது தவிர்க்கப்படும். இதன்மூலம் விபத்துக்களும் குறையலாம் என, போலீஸார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x