

ராமேசுவரம் அருகே உச்சிப்புளியை அடுத்த சேர்வைக்காரன் ஊரணியில் குக்கரில் சாராயம் காய்ச்சிய கொத்தனார் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் முதுகுளத்தூா் அருகே குக்கரில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக தாய் மற்றும் 2 மகன்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ராமேசுவரம் அருகே உச்சிப்புளி சேர்வைக்காரன் ஊரணியைச் சேர்ந்தவர் கருணாகரன் இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்.
ஊரடங்கினால் மதுகுடிக்க முடியாமல் தவித்த இவர் தன் வீட்டுக்கு பின்புறத்தில், தீ மூட்டி, குக்கரில், சாராயம் காய்ச்சினார்.
தவலறிந்த உச்சிப்புளி காவல்துறையினர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கருணாகரனை கைதுசெய்து அவரிடமிருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்திய குக்கர் மற்றும் ஐந்து லிட்டர் சாராயம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கருணாகரன், கள்ளசந்தையில் ரூ. 600 வரையிலும் மதுபாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மது பாட்டில் தட்டுப்பாடு உள்ளதால் சாராயம் காய்ச்சியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தில் விமலா அவரது மகன்கள் கிளிண்டன் என்ற பால்ராஜ், நேசக்குமார் ஆகியோர் வீட்டில் குக்கரில் கள்ளச் சாராயம் தயாரித்து வைத்துள்ளதும் தெரியவந்தது.
போலீஸார் வருவதைக் கண்ட 3 பேரும் தப்பி ஓடினா். வீட்டில் குக்கரில் வைத்திருந்த 25 லிட்டா் சாராய ஊறலை போலீஸார் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும் இளஞ்செம்பூா் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனா்.
எஸ். முஹம்மது ராஃபி